» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதன் 15, செப்டம்பர் 2021 9:35:16 PM (IST)தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

வணிக இலக்கு என்ற பெயரில் இந்தியா போஸ்டல் பேமண்ட் பேங்க், வேறு வங்கியில் உள்ள பணத்தை ஆதார் அட்டை மூலம் பணம் எடுத்துக் கொடுக்கும் பணி, தங்கப்பத்திரம் விற்பனை, ஆதார் அட்டை எடுக்கும் பணி, அஞ்சல் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் காப்பீடு, அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்குவது ஆகியவற்றில் நடைமுறை சாத்தியமற்ற இலக்குகள் நிர்ணயிப்பதை கண்டித்தும், இலக்குகளை நிறைவேற்ற வேண்டும் என மிரட்டி அஞ்சல் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தூத்துக்குடி தலைமை தபால் நிலையம் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு எழுத்தர் சங்க தலைவர் மைக்கேல், தபால்காரர் சங்க தலைவர் இளங்கோவன் கிராமப்புற ஊழியர் சங்க செயலர் ராமசந்திரன், ஆர்எம்எஸ் ஊழியர் சங்க செயலர் பொன்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். எழுத்தர் சங்க செயலர் மனோகர் தேவராஜன், மகளிர் அணி அமைப்பாளர் மெரிட்டா, தபால்காரர் சங்க செயலர் இராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பெண் ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest Cakes

Thoothukudi Business Directory