» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கந்துவட்டி வசூலித்தாக புகார்: 4 நிதி நிறுவனங்கள் மீது வழக்கு

புதன் 15, செப்டம்பர் 2021 9:28:48 PM (IST)

தூத்துக்குடியில் கந்து வட்டி வசூலித்ததாக 4 நிதிநிறுவனங்கள், 6 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் திருமணி. இவருடைய மனைவி மல்லிகா (52). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, கோரம்பள்ளம், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 4 நிதி நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கோரம்பள்ளத்தை சேர்ந்த சிலரிடமும் மொத்தம் ரூ.15 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம். இதற்கு முறையாக வட்டி செலுத்தி வந்தாராம். 

இந்த நிலையில் நிதிநிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், மல்லிகா மொத்தம் ரூ.26 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறினார்களாம். இது குறித்து மல்லிகா புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், 4 நிதிநிறுவனங்கள், 6 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் 5 பேர் மீது கந்துவட்டி வசூலித்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory