» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் தாய் - மகள் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்

புதன் 15, செப்டம்பர் 2021 8:37:12 PM (IST)



தூத்துக்குடியில் ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் பெண்ணும் அவரது 11 வயது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர், தாய் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் மனைவி உமையர்கனி 32, இந்த தம்பதிகளின் மகள் எஸ்தர் (11). இன்று மாலை உமையர்கனி மகள் எஸ்தருடன் தெர்மல் நகர் கேம்ப் 1ல் உள்ள தனது தாயார் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடி துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் ரவுண்டானா அருகே செல்லும்போது துறைமுகத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு லாரி அவர்களது ஸ்கூட்டரில் மோதியது. இதில், தாயும் - மகளும் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினர். 

இவ்விபத்தில் சிறுமி எஸ்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த உமையர் கனி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தெர்மல் நகர் இன்ஸ்பெக்டர் ராதிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமி எஸ்தரின் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து, லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்தால் துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், டவுன் டிஎஸ்பி கணேஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

டிரைவரின் போதையால் விபத்து..?

லாரி டிரைவர்கள் கஞ்சா, மது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவதால் நிதானமின்றி அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க தூத்துக்குடி துறைமுகம் முதல்  டோல் கேட் வரை காவல் துறையினர் அடிக்கடி சோதனை செய்தால் இது போன்ற விபத்துகள் தவிர்க்கலாம். 

மேலும், கனரக வாகனங்களில் பெரும்பாலும் கிளீனர்கள் இல்லாமலே லாரிகள், டாரஸ் லாரிகள் போன்றவை இயங்கி வருகின்றன. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டார    போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை.  இதன் காரணமாகத்தான் இது  போன்ற உயிர்ச்சேதங்கள் ஏற்படுகின்றன என்பது சமூக ஆர்வலரின் குற்றச்சாட்டாக உள்ளது.


மக்கள் கருத்து

இருக்கலாம்Sep 17, 2021 - 07:27:04 AM | Posted IP 108.1*****

அதானே .. பழைய லாரி அடியில் பெரிய கல் வைத்திருக்கிறார்கள் .. படத்தை பார்த்தால் தெரிந்து விட்டது... BRAKE இல்லாத/சரியாக இயங்காத லாரி எதுக்கு?? இன்னொரு உயிர் பறிபோகணுமா ?? பழைய இரும்புக்கடையில் விற்கவேண்டியது தானே..

இருக்கலாம்Sep 17, 2021 - 07:23:42 AM | Posted IP 108.1*****

பழைய லாரிகள் எல்லாம் brake சரியாக இயங்காது என்பதனால் அப்படியே ஓட்டுவார்கள் சில மானங்கெட்டவர்கள்..

Ayyasamy கேம்ப் 1Sep 15, 2021 - 10:20:43 PM | Posted IP 173.2*****

மேற்கண்ட விபத்து மிகவும் பரிதாபத்திற்கு உள்ளானது எங்களது தெர்மல் நகர் காவல் நிலையம் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது அனைத்து கனரக வாகனங்களையும் அடிக்கடி பரிசோதனைக்கு உள்ளாகி கொண்டிருக்கிறார்கள் இவர்களோடு தூத்துக்குடி துறைமுக நிர்வாகம் ஒத்துழைத்து துறைமுகத்தில் இருந்து வெளியே வரும் கனரக வாகனங்களையும் துறைமுகத்திற்கு லோடு ஏற்றிச் செல்ல இருக்கின்ற அனைத்து கனரக கனரக வாகனங்களின் ஓட்டுநர் களையும் மது மற்றும் போதைப்பொருள் உபயோகித்து உள்ளார்களா என்ற சோதனையை மேற்கொண்டு அவர்களை துறைமுகத்திற்குள் அனுப்ப நடவடிக்கை மேற் கொண்டார்கள் என்றால் மேற்கண்ட இதுபோன்ற விபத்துக்களை வருங்காலங்களில் தவிர்க்கலாம் என்பது எங்களுடைய கருத்து.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Black Forest Cakes






Thoothukudi Business Directory