» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதிய மின் மாற்றி: ஜி.வி.மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்!

புதன் 15, செப்டம்பர் 2021 5:38:20 PM (IST)ஓட்டப்பிடாரம் அருகே ஆயிரம் கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின் மாற்றியை ஜிவி மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம், கச்சேரிதளவாய்புரம் கிராமத்தில் ஆயிரம் கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை  ஜி.வி.மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். அப்போது கிராம பொதுமக்கள் பேருந்து வசதி வேண்டியும், முதியோர் உதவித்தொகை வேண்டியும் அவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

இந்நிகழ்வில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் காசி விஸ்வநாதன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, பேரூர் செயலாளர் இரா.வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள், ராஜாக்கண்ணு, முத்துலட்சுமி அய்யன்ராஜ், இளைஞரணி இம்மானுவேல், மகேந்திரன், விநாயகமூர்த்தி, சென்றாயப் பெருமாள்,  ஊராட்சி மன்ற தலைவர் சேர்ம பொன்செல்வி ரவிக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள், ராஜேஷ்வேல், ராஜ்,, பெருமாள்சாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory