» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை : ஆட்சியர் தகவல்

புதன் 15, செப்டம்பர் 2021 5:24:00 PM (IST)

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி மூலம் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் 2021 சாதாரண தற்செயல் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகம், வளர்ச்சி பிரிவு அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது. தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் 0461-2340598 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, பொது மக்கள் தேர்தல் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் அதனையும் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory