» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

புதன் 15, செப்டம்பர் 2021 8:49:45 AM (IST)

கோவில்பட்டியில் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேலபாண்டவர் மங்கலம் பகுதியைச் சேர்ந்த தாமோதர பாண்யடியன் மகன் கனகராஜ் (38) என்பவரை கடந்த 14.08.2021 அன்று இரவு அவரது வீட்டின் முன்பு வைத்து முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனை தடுக்கச் சென்ற அவரது தாயார் பார்வதி (59) என்பவரும் அரிவாளால் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் மேலபாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்த பூலோகப்பாண்டியன் மகன் பாலகிருஷ்ணன் (25), சாஸ்திரி நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மகேந்திரன் (21), அன்னை தெரசா நகரைச் சேர்ந்த ரத்னவேல் பாண்டியன் மகன் ரஞ்சித்குமார் (25), சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர்களான முருகேசன் மகன் சிவபெருமாள் (25) மற்றும் சண்முகராஜ் மகன் சரவணக்குமார் (21) ஆகிய 5 பேரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான பாலகிருஷ்ணன், ரஞ்சித்குமார் மற்றும் சிவபெருமாள் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், பாலகிருஷ்ணன், ரஞ்சித்குமார், சிவபெருமாள் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamBlack Forest Cakes


Thoothukudi Business Directory