» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்கு

புதன் 15, செப்டம்பர் 2021 8:40:37 AM (IST)

நாசரேத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜீவா (35). டிரைவர். இவர் முகநூலில் சரோன் மோர்கன் என்பவருடன் நண்பராக பழகி வந்தாராம். மோர்கன் இங்கிலாந்தில் வசித்து வருவதாக தெரிவித்து உள்ளார். மேலும் ஜீவா வேலை இல்லாமல் இருப்பதாக தெரிவித்து உள்ளார். இதனால் மோர்கன், இங்கிலாந்தில் வேலைவாங்கி தருவதாக ஆறுதல் வார்த்தைகள் கூறினாராம்.

பின்னர் விசா பெறுவதற்காக ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்து 100 தேவைப்படுகிறது என்றும், இந்த பணத்தை தனது நண்பர்களான சாஷித் அலி, ஆரிப்கான், அமித்குமார், ராஜாபாபு ஆகியோரது வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறி உள்ளார். இதனை நம்பிய ஜீவா பணத்தை 4 பேரின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. மீண்டும் மோர்கனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜீவா தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

DURAISep 15, 2021 - 09:24:08 AM | Posted IP 162.1*****

10 லட்சம் இருந்தால் எதுக்கு வெளிநாட்டிற்கு வேலைக்கு போக வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory