» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செண்பகவல்லி அம்மன் கோயிலில் ரூ.8.49 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்

புதன் 15, செப்டம்பர் 2021 8:23:45 AM (IST)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.8.49 லட்சம் வசூலானது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் வளாகம் மற்றும் இக்கோயிலுடன் இணைந்த மாா்க்கெட் சாலை முருகன் கோயில், சுந்தரராஜ பெருமாள் கோயில், தெப்பக்குளம் அருகே உள்ள விநாயகா் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள 19 உண்டியல்களில் காணிக்கை எண்ணும் பணி செண்பகவல்லி அம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

அறநிலையத்துறையின் துணை ஆணையா் (சங்கரன் கோவில்) கணேசன், செண்பகவல்லி அம்மன் கோயில் நிா்வாக அலுவலா் நாகராஜன், ஆய்வாளா்கள் முப்பிடாதி (ஓட்டப்பிடாரம்), சிவகலைபிரியா (கோவில்பட்டி) ஆகியோா் முன்னிலையில் திருக்கோயில் பணியாளா்கள், சிவனடியாா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், ரொக்கம் ரூ. 8 லட்சத்து 49 ஆயிரத்து 339 வசூலானது. மேலும் தங்கம் 51 கிராம், வெள்ளி 241 கிராம் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியிருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory