» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரேஷன் கார்டுகளை பி.எச்.எச் ஆக மாற்ற வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதன் 15, செப்டம்பர் 2021 8:02:39 AM (IST)என்.பி.எச்.எச் ரேஷன் கார்டுகளை பி.எச்.எச் ஆக மாற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரேஷன் கடைகளில் மத்திய அரசு சார்பில் வழங்கும் பொருட்கள் அனைத்தையும், அனைவருக்கும் வழங்க வேண்டும். கைரேகை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். ஏழை எளிய குடும்பங்களை பாதிக்கும் என்.பி.எச்.எச் என்ற அட்டை குறியீட்டை பி.எச்.எச் அட்டையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் பி.பூமயில் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் எம்.கமலா, மாநகர தலைவர் எம்.காளியம்மாள், புறநகர் குழு செயலாளர் பி.சரசுவதி, புறநகர் குழு தலைவர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

yeskey rSep 15, 2021 - 10:55:29 AM | Posted IP 162.1*****

With draw the finger print system at this corona period,No sanitation at ration shops after the fingering,this will resulting to spread the corona virus at this pandemic period. Most of the family members fingers are not matching unable to receive the TNPDS goods. In such cases mobile OTP numbers should be considered and adopt this OTP system at all over the Tamil Nadu.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory