» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணுக்கு தையல் இயந்திரம்: காவல்துறையினர் வழங்கினர்

புதன் 15, செப்டம்பர் 2021 7:58:39 AM (IST)நாசரேத்தில் வறுமையில் வாடிய விதவை பெண்ணுக்கு தையல் இயந்திரத்தை இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர் சாந்தா(32) இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டு இறந்து போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து கூலி வேலைக்கு சென்று வந்த சாந்தா, குழந்தையை கவனிக்க முடியாமல் சிரமம் அடைந்து வந்துள்ளார். இதனால் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தனக்கு உதவிடுமாறு கோரிக்கை வைத்து வந்தார். 

இந்நிலையில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் நாசரேத் காவல் நிலையத்தில் சாந்தாவுக்கு தையல் மிஷினை , இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழங்கினார். அப்போது ஏரல் உதவும் கரங்கள் அமைப்பைச் சேர்ந்த குருசாமி, அருணாச்சலம், கண்ணன் உள்ளிட்ட காவலர்கள் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Thoothukudi Business Directory