» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பட்டியலினத்தவர் படுகொலைகள் அதிகம் : அதிர்ச்சி தரும் ஆய்வு

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 5:55:58 PM (IST)

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடி மாவட்டத்திலும் 28 கொலைகள் நடந்துள்ளதாகவும்    'எவிடென்ஸ்' என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2020 வரையில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக எவிடன்ஸ் அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுதொடர்பான தகவல் பெறப்பட்டிருக்கிறது. கடந்த 2021 ஜனவரி மாதத்தில் இருந்து இந்தத் தகவல்களை எவிடென்ஸ் அமைப்பு திரட்டி வந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 33 மாவட்டங்களிலிருந்து எஸ்.சி, எஸ்.டி கொலைகள் குறித்த தகவல் பெறப்பட்டிருக்கிறது. தகவல் பெறப்பட்ட 33 மாவட்டங்களில் 300 எஸ்.சி, எஸ்.டி மக்கள் சாதிரீதியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தகவல் அளிக்காத 5 மாவட்டங்களையும் கணக்கிட்டு பார்த்தால் இந்த படுகொலை 340 முதல் 350 வரையில் நடந்திருக்கும் எனக் கணிக்க முடிகிறது.

மாதம் ஒன்றுக்கு சராசரியாக 5 முதல் 6 சாதி படுகொலைகளால் தலித் மற்றும் பட்டியல் பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில் 29 படுகொலைகள் தூத்துக்குடி மாவட்டத்திலும் 28 கொலைகள் மதுரை மாவட்டத்திலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 கொலைகளும் நாகப்பட்டினத்தில் 19 கொலைகளும் கோயம்புத்தூரில் 17 கொலைகளும் நடந்துள்ளன.

இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் மார்ச் 2021 வரையில் தகவல்கள் கொடுத்துள்ளனர். அண்மையில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிந்திருக்கிறது. அப்படி பார்க்கும்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி என்று கணக்கிட்டுப் பார்த்தால் 34 சாதிய படுகொலைகள் நடந்திருக்கின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தனியாக பிரிக்க முடியாத நிலையில் வைத்து பார்த்தால் விழுப்புரம் மாவட்டம்தான் கடந்த ஆண்டு வரை முதலிடத்தில் இருந்திருக்கிறது.

இந்த 300 படுகொலைகளில் 13 கொலைகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளன. 30 கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிற 257 சம்பவங்களில் 28 சம்பவங்கள் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன. மற்ற 229 சம்பவங்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டே மாதங்களில் தீர்ப்பு கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory