» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்களுக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 5:02:42 PM (IST)கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை இயக்குனர் மருத்துவ பணிகள்(காசம்) க.சுந்தரலிங்கம் ஆலோசனையின் பேரில் தேசிய காசநோயகற்றும் திட்டம் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அருண் விஸ்வநாத் தலைமை வகித்து பேசியதாவது காசநோயின் அறிகுறிகள் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார் கரனோ போலவே காசநோயும் காற்றின் மூலம் பரவுவம் தன்மை கொண்டது எனவே அனைவரும் முககவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தினார். 
மருத்துவ அலுவலர் காயத்ரி பேசுகையில் தினந்தோறும் கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள் பற்றி ‌எடுத்துகூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொரு பெண்களுக்கும் காசநோய் அறிகுறிகள் உள்ளனவா என்பது பற்றி கேட்டறிந்து கொண்டார். கர்ப்பிணி பெண்கள் கரனோ தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா என்பது உறுதி செய்யப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு எந்தெந்த மாதத்தில் வர வேண்டும் என்று தெளிவாக எடுத்துக் கூறினார். கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக காசநோயாளிக்கு இலவச‌ அரிசி மற்றும் மளிகை பொருட்களை மருத்துவர் காயத்ரி வழங்கினார்

மருத்துவ அலுவலர் நந்தினி காசநோயாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார் மருத்துவ அலுவலர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். முன்னதாக சுகாதார செவிலியர் செல்லத்தாய் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், பெண் துணை செவிலியர் சகுந்தலா, ஆய்வக நுட்புனர் ஸ்டெல்லா மேரி, முருககுமார் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest Cakes

Thoothukudi Business Directory