» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கந்துவட்டிக் கொடுமையால் நாட்டுப்புறக் கலைஞர் தற்கொலை: ஒருவர் கைது - தூத்துக்குடியில் பரபரப்பு

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 4:33:05 PM (IST)

தூத்துக்குடி அருகே கந்து வட்டிக் கொடுமையால் நாட்டுப்புறக் கலைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி அருகேயுள்ள, தட்டபாறை அருகே திம்மராஜ புரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பிரம்மராஜன் (60), மேளக் கலைஞர், மேலும் தமிழன்டா என்னும் இயக்கத்தின் மாநில பொருளாளராக உள்ளார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீவைகுண்டம் கீழகோட்டை தெருவைச் சேரந்த பிச்சாண்டி மகன் சிவ சிதம்பரம், கணபதி மகன் அருணாச்சலம், லெட்சுமணன் மகன் பார்த்திபன் ஆகியோரிடம் ரூ.3½ லட்சம் கடன் வாங்கினாராம். இந்த கடனுக்காக இதுவரை ரூ.10 லட்சம் வட்டியாக மட்டுமே செலுத்தியுள்ளார். 

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு காரணமாக சரியான வேலையில்லாமல் அவரால் வட்டி செலுத்த முடியவில்லையாம். இதனால் சிவ சிதம்பரம் உள்ளிட்ட மூவரும் அவருக்கு கந்துவட்டி கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த பிரம்மராஜன், நேற்று இரவு கூட்டுடன்காடு குளம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தட்டபாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி பொன்னரசு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் கீழகோட்டையைச் சேர்ந்த கணபதி மகன் அருணாச்சாலம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 2பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நாட்டுப்புறக் கலைஞர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கந்து வட்டிக் கொடுமையால் நாட்டுப்புறக் கலைஞர் தற்கொலை செய்த தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Nalam Pasumaiyagam

Black Forest Cakes




Thoothukudi Business Directory