» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 30ஆவது கட்ட விசாரணை : 121 பேருக்கு சம்மன்

செவ்வாய் 14, செப்டம்பர் 2021 8:51:36 AM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபா் ஆணையத்தின் 30ஆவது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது.

தூத்துக்குடியில் 2018 மே மாதம் 22, 23ஆம் தேதிகளில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரையிலான 29 கட்ட விசாரணையில், 1,209 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 863 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,179 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக, 30ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடியில் நேற்று தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பாா்த்த காவலா்கள், போராட்டத்தின்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், ஸ்டொ்லைட் குடியிருப்புப் பகுதியில் வாகனங்கள் தீவைப்பு தொடா்பாக புகாா் அளித்த ஸ்டொ்லைட் குடியிருப்பு வாசிகள், வழக்குப் பதிந்த காவலா்கள் என, 121 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது


மக்கள் கருத்து

PETCHIMUTHUSep 15, 2021 - 09:59:13 AM | Posted IP 173.2*****

இப்படியே கட்டம் கட்டமாக நடத்திகிட்டே இருந்தால் அப்போதைய ஆட்சியர் வெங்கடேசனை விசாரிப்பது எப்போது? அப்போதைய காவல் கண்காணிப்பாளர் மகேந்திரனை விசாரிப்பது எப்போது? அப்போதைய துணை காவல் கண்காணிப்பாளர் செல்வன் நாகரத்தினத்தை விசாரிப்பது எப்போது? துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு போட்ட துணை வட்டாட்சியர்களை விசாரிப்பது எப்போது? எல்லாவற்றுக்கும் மேலாக உளவுத்துறை முன்னாள் அதிகாரி அலெக்சாண்டர் அப்போது தூத்துக்குடியில் இருந்து உத்தரவுகளை பிறப்பித்ததாக ஒரு தகவல் நடனமாடியது. அதை பற்றி ஏதேனும் விசாரணை நடத்தப்பட்டதா? இவர்கள் அனைவரும் இன்றுவரை தங்களது பணியில் தான் இருக்கிறார்கள். ஒரு நாள் கூட சஸ்பெண்ட் செய்யப்பட வில்லை. உயிரை பறிகொடுத்தவர்கள் மட்டும் இன்றுவரை நீதியை எதிர்நோக்கி. காலம் கடந்தாலும் ஒரு நல்ல நீதி கிடைக்கட்டும். விசாரணை விரைந்து முடியட்டும்.

மக்கள்Sep 14, 2021 - 10:16:59 AM | Posted IP 162.1*****

100 ஆவது கட்ட விசாரணைக்கு தாண்ட வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory