» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிகரெட் பற்ற வைத்த நெருப்பு உயிரை பறித்தது!

திங்கள் 13, செப்டம்பர் 2021 11:57:33 AM (IST)

திருச்செந்தூர் அருகே சிகரெட் பற்றவைத்தபோது ஆடையில் தீப்பிடித்து தீக்காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தேரடி தெருவைச் சேர்ந்தவர் வேலு மகன் செல்லப்பா (57). இவர் நேற்று அளவுக்கு அதிகமான மது அருந்தி உள்ளார். இதனால் சட்டையில் மது சிந்தி நனைந்திருந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் அவர் போதையில் சிகரெட் பற்றவைத்தாராம். அப்போது அவரது ஆடையில் தீப்பற்றியதில் பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes





Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory