» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சாலைக்கு வ.உ.சி.யின் பெயர் சூட்டப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

வெள்ளி 3, செப்டம்பர் 2021 12:32:36 PM (IST)

தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை (WGC Road) வ.உ.சி சாலை என பெயர் மாற்றப்படும் என சட்டப்பேரவையில் முதல்வசர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. இதில் வ.உ.சி 150வது பிறந்த நாளையொட்டி புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம்: கோவை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி. பூங்காவில் வ.உ.சிதம்பரனார்  முழு உருவ சிலை அமைக்கப்படும். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது வழங்கப்படும். 

வ.உ.சி நினைவு நாளான நவம்பர் 18-ந் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும். வ.உ.சி எழுதிய புத்தகங்கள் புதுப்பிக்கப்பட்டு குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் நவீன டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும். 

தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை வ.உ.சி சாலை என பெயர் மாற்றப்படும். கப்பல் தொடர்பான துறைகளில் சிறந்த பங்காற்றி வரும் தமிழருக்கு ஆண்டுதோறும் வ.உ.சி பெயரில் விருதுகள் வழங்கப்படும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டுக்கு கட்டப்படும் அரசு கட்டடங்களுக்கு வ.உ.சி பெயர் வைக்கப்படும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வ.உ.சி பெயரில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவுப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தூத்துக்குடியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் டபிள்யூஜிசி ரோட்டிற்கு வ.உ.சிதம்பரனார் சாலை என அழைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததை வரவேற்று தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி தேரடி பகுதியில் திமுக பிரமுகர் கீதா செல்வமாரியப்பன் தலைமை வகித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தமிழ்நாடு அகில இந்திய வ.உ.சி பேரவை சார்பில் நெல்லையப்பன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் வள்ளிநாயகம், விடுதலை சிறுத்தை கட்சி மாநகர இளைஞரணி செயலாளர் கனகராஜ், பசும்பொன் தேவர் பேரவை தங்கையா, காமராஜ் பேரவை கிங்ஸ்லி வக்கீல் மந்திரமூர்த்தி அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

சிவா கத்தார்Sep 4, 2021 - 01:06:06 PM | Posted IP 162.1*****

appadiye antha polpettainu irukkura pera munpu mathiri polnayakkan pettai nu sollunka leader

சொக்கலிங்கம், பதிப்பாளர், சைவமுரசு பத்திரிக்கைSep 4, 2021 - 10:08:52 AM | Posted IP 173.2*****

முழுமனதுடன் வரவேற்கிறேன். இவண் சொக்கலிங்கம், பதிப்பாளர், சைவமுரசு பத்திரிக்கை

PSCCSep 3, 2021 - 03:50:27 PM | Posted IP 108.1*****

valga valga valgave

TUTICORIN MAKKALSep 3, 2021 - 02:38:23 PM | Posted IP 173.2*****

நல்ல விஷயம். வாழ்க வளமுடன்

SARAVANANSep 3, 2021 - 01:17:06 PM | Posted IP 162.1*****

GOOD DECISION

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory