» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவியர்கள் உற்சாகம்!

புதன் 1, செப்டம்பர் 2021 10:02:25 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் பல மாதங்களுக்கு பின்னர்  பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியர்கள் உற்சாகமாக பள்ளிக்குச் சென்றனர். 

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டன. பிளஸ் 2 தேர்வுகள் மட்டுமே நடைபெற்றன. ஒன்று முதல் பிளஸ் 1 வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர், 2020-2021 ஆம் கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. கல்வித் தொலைக்காட்சியிலும் ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தினர். ஜனவரி மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. 

இதையடுத்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு அமல்படுத்திய கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. எனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 9 முதல் 12ம் ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக இன்று 329 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 328 பள்ளிகள் திறக்கப்பட்டன. பல மாதங்களுக்குப் பிறகு ஆசிரியர்களையும், சக மாணவர்களையும் பார்க்கும் ஆவலில் மிகுந்த மகிழ்ச்சியுடன் மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். அனைவரையும் ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். நுழைவு வாயிலில் அனைவருக்கும் கிருமி நாசினி மருந்து அளித்து கைகளை சுத்தப்படுத்திய பிறகே அனுமதிக்கப்பட்டனர். மேலும், சோப்பு திரவம் பயன்படுத்தி கைகளை தண்ணீரில் கழுவும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. வகுப்புக்கு 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் அமர வைத்து பாடங்கள் நடத்தப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory