» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை துவக்கம்: செப். 3 வரை நடைபெறுகிறது

திங்கள் 30, ஆகஸ்ட் 2021 11:22:59 AM (IST)

அஞ்சல் துறை சாா்பில், தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை இன்று (ஆக.30) தொடங்கியது. செப்.3ம் தேதி வரை 5 நாள்களுக்கு விற்பனை நடைபெறுகிறது.

இது குறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் திவ்யா சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் தங்கப்பத்திரம் விற்பனை அஞ்சலகங்கள் மூலம் திங்கள்கிழமை (ஆக.30) தொடங்கி வரும் செப். 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,732 ஆகும்.

கோவில்பட்டி கோட்டத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய தலைமை அஞ்சலகங்கள், அனைத்து துணை அஞ்சலகங்களிலும் தங்கப்பத்திரம் விற்பனை நடைபெறும். தனி நபா் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிக பட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு பான் காா்டு நகல், ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, கடவுச் சீட்டு இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை கொடுத்து தங்கப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு 96770 - 67116, 89400 - 19911, 79044 - 20532 ஆகிய செல்ப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamBlack Forest Cakes


Thoothukudi Business Directory