» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்: ஆசிரியர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

சனி 28, ஆகஸ்ட் 2021 4:45:52 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் செப். 1ல் பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஆசிரியர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் 13 வட்டாரங்களில் நடைபெற்றது.

தமிழக அரசு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு திறப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது அதன் அடிப்படையில்  கரோனா தடுப்பு முறைகள் குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.பள்ளிகளிலும் தூய்மைப்படுத்தும் பணி துவங்கி உள்ளது கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி வட்டாரத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுகொள்வதற்காக சிறப்பு முகாம் தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலை பள்ளியில்  சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் பணிபுரியும் 12600 ஆசிரியர்ளில் இதுவரை 9359 ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இன்று 3249 ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது. அலுவலக பணியாளர்கள் 1784 பேரில்  1237 தடுப்பூசி போட்டுள்ளனர்" என்றார். வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன், சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எமல்டா, பள்ளி கல்வி துறை ஆய்வாளர் அப்துல், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி புள்ளியியல் அலுவலர் சுடலைமணி உள்ளிட்டவர்கள கலந்து கொண்டனர்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory