» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வெள்ளி 27, ஆகஸ்ட் 2021 10:20:05 AM (IST)திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆவது படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 2 மணிக்கு உதயமார்தாண்டம் அபிஷேகமும் அதனை தொடர்ந்து மற்றகால பூஜைகளும்  நடைபெற்றது.

தொடர்ந்து 5.30 மணிக்கு செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர்   தர்ப்பை புல்களாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட செப்பு கொடி மரத்திற்கு  16 வகையான அபிஷேகமும் மஹா தீபாரதனையும் நடைபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில்  கரோனா தொற்று  பரவலை கருத்தில் கொண்டு  செப்டம்பர் 5 வரை 10 நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

திருவிழாவின் முக்கிய நாட்களான  5ம் நாளன்று குடவரை தீபாராதனை  நடைபெற உள்ளது.  7ஆம் நாளன்று சுவாமி சிகப்பு சாத்தி கோலத்திலும் 8ஆம் நாளன்று  காலையில் வெள்ளை சாத்தி மற்றும் மாலையில்  பச்சை சாத்தி கோலத்திலும் கோயில் உள் பிரகாரத்தில் எழுந்தருளி வலம் வருவார். பத்தாம் திருநாள் தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொடியேற்றம் உள்ளிட்ட முக்கிய திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் https://youtu.be/MjiiXtXHNVI என்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Black Forest Cakes
Thoothukudi Business Directory