» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை - ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 26, ஆகஸ்ட் 2021 4:59:07 PM (IST)திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு வருகிற 27 முதல் செப்.05 வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் இன்றி மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளார். அதனடிப்படையில், கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைபடுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2021ம் ஆண்டு ஆவணித் திருவிழாவை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 27.08.2021 முதல் 05.09.2021 முடிய திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை. 

திருக்கோயிலில் ஆகம விதிப்படி அனைத்து நிகழ்வுகளும் திருக்கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும். ஆவணித் திருவிழா முக்கிய நிகழ்வுகளை பக்தர்கள் வீட்டிலிருந்து இணையதளம் வாயிலாக (லுழர வுரடிந) காணும் வகையில் திருக்கோயில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் வீட்டில் இருந்தே சுவாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

கொடிபட்ட ஊர்வலம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று மாலை 4 மணிக்கு தூண்டிகை விநாயகர் கோவிலில் கொடிப்பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு கோவில் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி தீட்சிதர் யானை மீது அமர்ந்து கொடிப்பட்டத்தை கையில் ஏந்தியவாறு கோவில் கிரிபிரகாரம் சுற்றி கோவிலை வந்து சேர்ந்தார். பின்னர் கொடிப்பட்டம் கோவிலுக்குள் சென்றது. நிகழ்ச்சியில், கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory