» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!

ஞாயிறு 1, ஆகஸ்ட் 2021 10:33:19 AM (IST)

எட்டையாபுரம் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் மாதவன். இவரது மனைவி அமுதா (23). ஆகியோருக்கு கடந்த 28.05.2021ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் அமுதா மாமியாருடன் கூட்டுக்குடும்பத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் அமுதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த எட்டையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து, விளாத்திக்குளம் டி.எஸ்.பி., பிரகாஷ் வழக்கு பதிவு செய்தார். அமுதா திருமணமான 2 மாதங்க‌ளில் தற்கொலை செய்துகொண்டதால், அவர் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறெதும் காரணமா என கோவில்பட்டி கோட்டாட்சியர், விசாரனை செய்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory