» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

சனி 31, ஜூலை 2021 5:52:03 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 1) காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு 01.04.2021 முதல் 31.07.2021 முடிய மொத்தம் 7,259 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 01.08.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்;கண்ட இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி - தூத்துக்குடி, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - பாத்திமா நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - கணேஷ் நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - திரேஸ்புரம், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - தருவை ரோடு, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - மடத்தூர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - முள்ளக்காடு, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மில்லர்புரம், தூத்துக்குடி, புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி, இஞ்ஞாசியார்புரம், தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி, திருச்செந்தூர் ரோடு, தூத்துக்குடி ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதியில், ஆரோக்கியபுரம், வடக்கு சோட்டையன்தோப்பு, ஆழ்வார்குளம், திருச்செந்தூர்பட்டி, சூளைவாய்க்கால், வெள்ளாளன்விளை, அரசு பொது மருத்துவமனை - திருச்செந்தூர், அரசு பொது மருத்துவமனை - காயல்பட்டினம், குமாரசாமிபுரம், கருங்கடல், சுப்பிரமணியபுரம், அரசு பொது மருத்துவமனை - கோவில்பட்டி, நகராட்சி அலுவலகம் பூங்கா சாலை - கோவில்பட்டி, ராஜா மேல்நிலைப்பள்ளி - எட்டையபுரம், நகர்நல மையம் - ஸ்ரீராம்நகர், கோவில்பட்டி, துணை சுகாதார நிலையம் - இளவேலங்கால், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - கந்தசாமிபுரம், அங்கன்வாடி மையம் - மேலப்பாண்டியாபுரம், 

அங்கன்வாடி மையம் - சண்முகாபுரம், சத்துணவு மையம் - வானரமுட்டி,ஆரம்ப சுகாதார நிலையம் - கழுகுமலை, ஆரம்ப சுகாதார நிலையம் - கழுகுமலை, சத்துணவு மையம் - புதுக்கோட்டை, ஆரம்ப சுகாதார நிலையம் - கயத்தார், சத்துணவு மையம் - கைலாசபுரம், ஆரம்ப சுகாதார நிலையம் - கயத்தார், துணை சுகாதார நிலையம் - அய்யனாரூத்து , ஆரம்ப சுகாதார நிலையம் - வெள்ளாளங்கோட்டை, சத்துணவு மையம் - முடுக்கன்குளம், ஆரம்ப சுகாதார நிலையம் - கடம்பூர், கலைஞர் கிளினிக் - விளாத்திகுளம், சமுதாய நலக்கூடம் - அருணாச்சலபுரம், சமுதாய நலக்கூடம் - நமச்சிவாயபுரம், சமுதாய நலக்கூடம் - விருசம்பட்டி, சமுதாய நலக்கூடம் - மாமு நைனார்புரம், சமுதாய நலக்கூடம் - ஸ்ரீரங்கபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - மாசார்பட்டி , ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி - தவசிலிங்கபுரம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி - எல்.வி. புரம் ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

R. YogarajAug 1, 2021 - 09:15:51 PM | Posted IP 173.2*****

நமது மாவட்டத்தில் corono எதிராக பணியாற்றி வரும் அனைத்து துறை ஊழியர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.மேலும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால் பொது மக்களுக்கு corono தடுப்பூசி போடும் மருத்துவ பணியாளர்கள் நீங்கள் தயவு செய்து ஊசி போடும் நேரத்தில் மொபைலை தவிர்க்க வேண்டும் என்று பொது மக்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன். இது உயிர் சம்பந்தமான விஷயம்

நன்பன்Jul 31, 2021 - 06:22:32 PM | Posted IP 173.2*****

கோவாக்சினா கோவிஷில்டா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory