» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஸ்மாட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தல்!

வெள்ளி 30, ஜூலை 2021 3:48:23 PM (IST)தூத்துக்குடியில் ஸ்மாட் சிட்டி திட்ட பணிகள் குறித்து  மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மாட் சிட்டி திட்ட பணிகள் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜி.பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பூங்கா மற்றும் நடைபாதை அமைத்தல், பக்கிள் ஓடை இருபுறம் சாலை மற்றும் பூங்கா அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் Bio mining மூலம் செயல்படுத்துதல் குறித்தும் குடிநீர் சீராக விநியோகம் செய்திடவும், விநியோக பணிகளை கண்காணிக்கவும், தனி தனியாக எலக்ரானிக் புளோமீட்டர் அமைக்கும் பணிகள் குறித்தும், விவிடி மேல்நிலை நீர்தேக்க தொட்டி பூங்கா அருகில் பல்நோக்கு பயன்பாடு ஆடிடோரியம் அமைத்தல் குறித்தும், அம்பேத்கார் நகர் பகுதியில் சுமார் 7 ஏக்கர் பரப்பில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைத்தல் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் மீன் வள கல்லூரி எதிரில் 25 ஏக்கர் பரப்பளவில் வர்த்தக மையம் அமைப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. 

மேலும் ஸ்மாட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க  அமைச்சர் பெ.கீதாஜீவன் அறிவுறுத்தினார். மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அமைச்சர் பெ.கீதாஜீவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நமது மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள பிரகாஷ்,  3 தினங்களாக வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இன்று மாநகராட்சி பகுதியில் நடைபெறும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கையால் கொரோனா கட்டுப்படுத்தபட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் நிறைய பொதுமக்கள் தடுப்பூசி போட வேண்டும் ஆர்வத்துடன் முன்வந்துள்ளார்கள். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தினசரி குடிநீர் வழங்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இன்னும் 1½ ஆண்டு காலத்திற்குள் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வழங்கப்படும். 

தூத்துக்குடி பாதாள சாக்கடை திட்டம் நீண்ட கால நிலுவையில் உள்ள திட்டமாக உள்ளது. இன்று வரை முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. இப்பணிகளையும் முழுமையாக முடிக்க அலுவலர்களுக்கும், ஒப்பந்தகாரர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் 6 மாத காலத்திற்குள் இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படும். விரிவுபடுத்தபட்ட பகுதிகளையும் பாதாள சாக்கடை திட்டத்துடன் இணைக்க ரூ.100 மதிப்பிட்டில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. ஸ்மாட் சிட்டி திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஒருசில பணிகள் நிலுவையில் உள்ளது அதற்கான பிரச்சனைகளையும் தீர்த்து அவைகளையும் உடனடியாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பெரிய அளவில் ஒரு வர்த்தக மைய அரங்கம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அம்பேத்கார்நகர் பகுதியில் ரூ.25 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கவும் இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு மக்களின் நலன் பயக்கும் அடிப்படை திட்டங்கள் அத்தனையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து விவிடி மேல்நிலை நீர்தேக்க தொட்டி பூங்கா அருகில் பல்நோக்கு பயன்பாடு ஆடிடோரியம் அமைக்கும் பணிகளையும், அம்பேத்கார் நகர் பகுதியில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ள பகுதியையும், தூத்துக்குடி மீன்வள கல்லூரி அருகில் 25 ஏக்கர் பரப்பளவில் வர்த்தக மைய ஆடிட்டோரியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதியையும் சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செந்தூர்பாண்டியன், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.வித்யா மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

தூத்துக்குடி ஏரியா காரன்Jul 30, 2021 - 09:00:41 PM | Posted IP 162.1*****

ஒரே இடத்தில உருப்படியாக வேலை செய்யாமல், விட்டு விட்டு பத்துக்கு மேற்பட்ட இடத்தில அங்காங்கே வேலை பார்ப்பங்களாம்..

tuty citizenJul 30, 2021 - 05:46:48 PM | Posted IP 108.1*****

what happened to integrated bus stand

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory