» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் : வணிகர்கள் உறுதிமொழி ஏற்பு!

வெள்ளி 30, ஜூலை 2021 10:36:48 AM (IST)தூத்துக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என வணிகர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டினை சேர்க்கப்பட்ட பொருட்கள் கொண்ட குட்கா பான்மசாலா உள்ளிட்ட எந்த சுவைக்கும் பொருட்களையும் தயாரிக்கவோ, வாகனங்களில் எடுத்துச் செல்லவோ, விநியோகிக்கவும், சேமிக்கவும், மற்றும் விற்பனை செய்யவும் மாட்டேன் எனவும் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் நலன் காத்திட நானும் எனது நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்களும் ஒத்துழைத்து உணவு வணிகம் புரியவும் என தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். 

நிகழ்ச்சியினை சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மத்திய மாவட்ட சில்லறை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் வெற்றிராஜன் தலைமை வகித்தார்.  மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மாரியப்பன், டவுண் டிஎஸ்பி கணேஷ், வணிகர் சங்க மாவட்ட தலைவர் சோலையப்ப ராஜா, செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ஆனந்த பொன்ராஜ், மகளிர் அணி செயலாளர் ராஜம், வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவர் அன்புராஜ், செயல் தலைவர் சந்தனராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

சாமான்யன்Jul 30, 2021 - 11:23:31 AM | Posted IP 162.1*****

அப்போ ஒயின் ஷாப் ல சத்து டானிக் விற்கிறாங்களா ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory