» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கைவரிசை காட்டிய பைக் திருடர்கள் 3பேர் கைது - 8 பைக்குகள் மீட்பு!!

வெள்ளி 30, ஜூலை 2021 10:21:05 AM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் பைக் திருடிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 8 பைக்குகளை மீட்டனர்.

தூத்துக்குடி நகரில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து பைக்குகள் திருடுபோயின. இதுகுறித்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், டவுன் டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் எஸ்ஐ சிவகுமார், ஏட்டுகள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், முத்துப்பாண்டி, திருமணி உள்ளிட்டவர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த முருகன் மகன் கிருஷணமூர்த்தி (22), ஜவஹர் மகன் சபீர் முகம்மது (20), கந்தன் காலனியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சண்முகநாதன் என்ற சார்லஸ் (20) ஆகியோர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 8 பைக்குகள் மீட்டனர். மீட்கப்பட்ட அந்த பைக்குகளை எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டார். 

மேலும் கைதான 3 பேரும் தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் பைக்குகளை திருடி நெல்லை, வல்லநாடு, திசையன்விளை, சாத்தான்குளம், வசவப்பபுரம், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மிக குறைவான விலைக்கு விற்றுள்ளதும், மற்றொரு பகுதிக்குக் கொண்டு சென்று அடகு வைத்தும், பைக் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பைக்குகளை கண்டுபிடித்து மீட்ட தனிப்படையினரை எஸ்பி ஜெயக் குமார் பாராட்டினார்.


மக்கள் கருத்து

TutyJul 30, 2021 - 01:54:17 PM | Posted IP 162.1*****

Bike number plate oda potrutha Nala erukum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory