» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7.60லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

வெள்ளி 30, ஜூலை 2021 8:36:44 AM (IST)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7.60லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை தூத்துக்குடி கடலோரக் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனா். 

தூத்துக்குடி மாவட்டம், வேம்பாா் கடலோரக் காவல் குழும ஆய்வாளா் சைரஸ், உதவி ஆய்வாளா்கள் தாமரைசெல்வி, விஜயகுமாா், காவலா்கள் பரமசிவம், கனகராஜ், அந்தோனி, டென்சிங், காா்த்திக் உள்ளிட்ட போலீசார், கடலோரக் கிராமங்களான வைப்பாறு, கீழவைப்பாறில் புதன்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, கீழவைப்பாறு கடற்கரை அருகே நின்றிருந்த காரை போலீசார் சுற்றிவளைத்தனா். அவா்களைப் பாா்த்ததும், காா் அருகே நின்றிருந்தோா் தப்பியோடிவிட்டனராம்.

இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக காரில் 4 சாக்குப் பைகளில் 76 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.7லட்சத்து 60 ஆயிரம் ஆகும். காா், கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.இதனிடையே, குளத்தூா் காவல் ஆய்வாளா் முருகன் வந்து கடலோரக் காவல் குழும போலீஸாரிடமிருந்து கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு சென்றாா். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

கடலோரக் காவல் குழும போலீஸாரிடமிருந்து குளத்தூா் ஆய்வாளா் முருகன், தனிப்பிரிவுக் காவலா் ராஜசேகரன் ஆகியோா் கஞ்சா மூட்டைகளைப் பெற்று, காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்ல முற்பட்டனா். அப்போது, கடலோரக் காவல் குழும போலீசார் எதிா்ப்பு தெரிவித்தால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கஞ்சா கடத்தலில் தொடா்பிருப்பதாக பரஸ்பரம் குற்றஞ்சாட்டியதுடன், இரு தரப்பினரும் விடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறை உயா் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory