» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் சேர ஆக.10 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

வெள்ளி 30, ஜூலை 2021 8:26:48 AM (IST)

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர இணையதளம் மூலமாக மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தெரிவித்துள்ளாா்.

இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவிகள் விண்ணப்பங்களை இணையதள முகவரியில் ஆக. 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவிகள், கல்லூரி உதவி மையங்கள் மூலமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 50 செலுத்த வேண்டும்.

எஸ். சி./எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை இணையதளம் வாயிலாகவோ, உதவி மையங்களில் ஜூலை 26ஆம் தேதி அல்லது அதற்கு பின் பெற்ற வங்கி வரைவோலையாகவோ செலுத்தலாம் என கல்லூரி முதல்வா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory