» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி பிரிந்து சென்றதால் அதிமுக நிர்வாகி தற்கொலை

வியாழன் 29, ஜூலை 2021 9:09:15 PM (IST)

கயத்தாறில் குடும்ப பிரச்சினையில் மனைவி பிரிந்து சென்றதால் அ.தி.மு.க. நிர்வாகி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நகர பஞ்சாயத்து 13-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மகன் கார்த்திக் என்ற கருப்பசாமி (41). தச்சு தொழிலாளியான இவர் அ.தி.மு.க. நகர இளைஞர் பாசறை இணை செயலாளராக இருந்து வந்தார். இவருடைய மனைவி முத்துலட்சுமி (38). இவர்களுக்கு மாரீஸ்வரன் (5), ஹரீஸ் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் முத்துலட்சுமி கோபித்து கொண்டு கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டுக்கு சென்றார்.

இதனால் மனமுடைந்த கார்த்திக் நேற்று காலையில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த கார்த்திக்கின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம் 

நாசரேத் சந்தி பஜாரில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவர் பெர்லின் (35). இவர் நாசரேத் கனகராஜ் தெருவில் தனது மனைவி சரோஜா மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அவர், மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்துள்ளார். பின்னா் மனைவியிடமிருந்து நகையை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டள்ளது. 

இதில் மனமுடைந்த அவரது மனைவி,  2 ஆண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெள்ளாளன்விளையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனம் உடைந்த பெர்லின் வீட்டின் சமையலறையில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து நாசரேத் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்கேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory