» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 24பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்: எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

வியாழன் 29, ஜூலை 2021 4:24:04 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 24பேருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைக்கலாபுரம் பின்புறம் தண்டவாளம் அருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு கார்களை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 110 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து மேற்படி கஞ்சா மற்றும் இரண்டு கார்களையும் கைப்பற்றி எதிரிகளான கேரளாவைச் சேர்ந்த அஸ்வின், ஆசிர், ஷம்னாஸ் மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சாய் கணேஷ் ஆகிய 4 நபர்களை கைது செய்த திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் சுந்தரம், சிறப்பு உதவி ஆய்வாளர் கனகராஜ், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ராஜ்குமார், ஆத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் இசக்கியப்பன், திருச்செந்தூர் காவல் நிலைய தலைமை காவலர் மாரியப்பசாமி, முதல் நிலை காவலர் சொர்ணராஜ், காவலர்கள் சதானந்தம் மற்றும் பாண்டிதுரை ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் 12 மணி நேரத்தில் எதிரிகளை கைது செய்து 10 பவுன் நகைகளை மீட்ட புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் பாண்டியன், தலைமை காவலர் சிவசக்திவேல், முதல்நிலைக் காவலர் கிருஷ்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

சங்கரலிங்கபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் காணாமல் போன வழக்கில் நாகலாபுரத்தை சேர்ந்த முத்துபிரியா என்பவரை கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம் பகுதியில் கண்டுபிடித்து நிலையம் கொண்டு வந்த மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா, சங்கரலிங்கபுரம் உதவி ஆய்வாளர் ஆறுமுகம், காவலர் ஜெகன் ஆகியோர் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 21.07.2021 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கண்டுபிடித்து வழக்கின் சொத்துக்களான ரூபாய் 66,000/- மதிப்பிலான 6 செல்போன்களை கைப்பற்றி எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை, தலைமை காவலர்கள் ஞானகுரு, ஆறுமுகநயினார், முதல் நிலை காவலர் தாமஸ் சேவியர் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு குடோனில் 5610 லிட்டர் மண்ணெண்ணெய்யை கைப்பற்றி உணவு பாதுகாப்புதுறையிடம் ஒப்படைத்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ், முதல் நிலை காவலர் செல்வகுமார், தனிப்பிரிவு காவலர் அருண் விக்னேஷ், காவலர் கருப்பசாமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

3 காவல் ஆய்வாளர் உட்பட 24 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கிறிஸ்டி ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory