» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உப்பள தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாம்

வியாழன் 29, ஜூலை 2021 3:30:01 PM (IST)தூத்துக்குடியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உப்பள தொழிலாளர்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி தன்பாடு உப்பு திருமண மண்டபத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் சார்பில் உப்பள தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சங்க தலைவர்  பொன் பாண்டியன்  தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் மாரியப்பன், உப்பு பாக்கெட் பண்டல் கட்டும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் என்பி ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர். 

இந்நிகழ்ச்சியில் உப்பு பாக்கெட் பண்டல் தொழிற்சங்க செயலாளர் கோட்டு ராஜா, துணைத் தலைவர்கள் ராஜசேகர் அந்தோணி ராஜ் என்ற கண்ணன், துணைச் செயலாளர்கள் பட்சிராஜா, மாரியப்பன், பொருளாளர் சந்திரசேகர், தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்க செயலாளர் எம்எஸ்பி தேன்ராஜ் பொருளாளர், ரெங்கநாதன் துணைத் தலைவர்கள் நடராஜன், ராமசாமி கேஏபி பாஸ்கர், சேர்ம நாதன், ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இம்முகாமில் முத்தையாபுரம், கோவங்காடு, முள்ளக்காடு, வேப்பலோடை, புதூர் பாண்டியாபுரம் பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பின்னர் தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory