» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பத்திரப்பதிவு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : தூத்துக்குடியில் பரபரப்பு

வியாழன் 29, ஜூலை 2021 12:06:48 PM (IST)



தூத்துக்குடியில் பத்திரப்பதிவுத் துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் குருசாமி, தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேலாளராக உள்ளார். இவர் இதற்கு முன்னர் தூத்துக்குடி மேலூர் சார் பதிவாளராக பணியாற்றியபோது முறைகேடுகளில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஹெக்டேர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர்கள் ஜெயஸ்ரீ, சுதா, சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் அடங்கிய குழுவினர் இன்று அதிகாலை முதல் பத்திரப்பதிவுத் துறை அதிகாரி குருசாமியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் முடிவில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டாரா என்பது தெரியவரும். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory