» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஏஓவை வெட்டிக் கொல்ல முயற்சி: தந்தை - மகனுக்கு போலீஸ் வலைவீச்சு!!

வியாழன் 29, ஜூலை 2021 11:58:29 AM (IST)

ஆதிச்சநல்லூரில் வி.ஏ.ஓ.வை வெட்டிக் கொல்ல முயன்றதாக தந்தை - மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கடந்த 28ம் தேதி ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில் விஏஓ லூர்துசாமி நிலத்தை அளவீடு செய்ய முன்றபோது அப்பகுதியைச் சேர்ந்த கொம்பையாவும் அவரது மகன் மணிகண்டன் என்பவரும் தடுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் இருவரும் வீ.ஏ.ஓவை கம்பாலும் அரிவாளாளலும் தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த விஏஒ ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கொம்பைய்யா மற்றும் அவரது மகன் மணிகண்டன் மீது ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam
Black Forest CakesThoothukudi Business Directory