» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தட்டச்சு பயிற்சிக்கு சென்ற இளம்பெண் திடீர் மாயம்

வியாழன் 29, ஜூலை 2021 11:44:01 AM (IST)

தூத்துக்குடியில் தட்டச்சு பயிற்சி நிலையத்திற்கு செல்வதாக கூறிச்சென்ற இளம்பெண் ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரம் புரத்தைச் சேர்ந்தவர் குருசந்திரன். இவரது மகள் கஜலட்சுமி (21). இவர் கடந்த 27ம் தேதி தட்டச்சு பயிற்சி நிலையத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes



Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory