» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உணவு வணிகர்கள், பணியாளர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 29, ஜூலை 2021 11:07:40 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கரோனா  தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : கரோனா என்ற வைரஸ் நோய் உலகளாவிய கொள்ளை நோயாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டு, அதன் தடுப்பு நடவடிக்கைகளை அரசு சீறிய முறையில் எடுத்துவருகினற்து. தற்பொழுது கரோனா நோய் தடுப்பின் ஒரு அங்கமாக 18 வயதினருக்கு மேற்பட்டோருக்கு அரசு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இத்தடுப்பூசியை பொதுமக்கள் எடுத்துக்கொள்ள இம்மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. 

தற்பொழுது ஊரடங்கு தளரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் திரளாக வணிக மையங்களுக்கு வந்நவண்ணம் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள் டீக்கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர், தெருவோர வணிகர்கள், விழாக்கால விற்பனையாளர்கள் உள்ளிட்ட உணவு வணிகர்களில், 2177 வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமமும், 15351 வணிகர்கள் உணவு பாதுகாப்புச் சான்றிதழும் பெற்றுள்ளனர். 

அறிகுறியில்லாமலோ அல்லது அறிகுறியுடன் உள்ள நோய்த்தொற்று உள்ளோரிடமிருந்து கரோனா மீண்டும் பொதுமக்களுக்கு பரவுவதை தடுப்பதற்காகவும், நலமுடன் உள்ளோர் கொராணய பாதிப்பிற்குள்ளாகாமல் தடுக்கவும், உணவு வணிக நிறுவன உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் கரோனா நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு பணியும் இம்மாவட்டத்தில் நடைபெற்றுவருகின்றது. இருப்பினும், அவ்வணிக நிறுவன உரிமையாளர்களும் பணியாளர்களும் கரோனா நோய் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுவதில் தொய்வு காணப்படுகின்றது.

எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (உணவு வணிக உரிமம் மற்றும் பதிவு) ஒழுங்குமுறைகள் 2011-ன் பட்டியல்-4, பகுதி-2-ன் விதி 10.1(4)-ல் கூறப்பட்டுள்ளவாறு அனைத்து உணவு வணிக நிறுவன உரிமையாளர்களும் பணியாளர்களும் கொள்ளை நோயான கரோனா நோய்க்கு எதிராக அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு, நோய் பரவுதலைக் கட்டுப்படுத்திட உதவுமாறு அறிவிக்கப்படுகின்றது. தவறும்பட்சத்தில் உணவு வணிக நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. தடுப்பூசிகள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் இலவசமாக வழங்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam


Thoothukudi Business Directory