» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இருந்து மணியாச்சிக்கு புதிய சாலை: நெல்லை ரயில்களை பிடிக்க வசதியாக ஏற்பாடு

வியாழன் 29, ஜூலை 2021 10:42:36 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து மணியாச்சிக்கு 30 நிமிடங்களில் பயணிக்கும் வகையில் புதிய சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டம் தயாரித்துள்ளது. 

தூத்துக்குடி துறைமுக நகரமாக திகழ்கிறது. இங்கு விமான நிலையம், நான்கு வழிச் சாலைகள் என சாலை, ஆகாய மார்க்கமாக பல்வேறு வசதிகள் இருந்தும் ரயில் வசதிகள் மிகக் குறைவு. தற்போதைய ரயில்வே ஸ்டேஷன் பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது. அப்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி கீழூரில் பழைய நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் அமைக்கப்பட்ட ரயில் நிலையம் இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளதால் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு ரயில்கள் வருவதற்கே பெரும் பாடாக உள்ளது.

ஏனெனில் தூத்துக்குடிக்கு ரயில் வரும் முக்கிய இடங்களில் நான்கு ரயில்வே கேட்டுகள் அமைந்துள்ளன. இதில் 3ம் கேட்டில் மட்டுமே ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற ரயில்வே கேட்டுகள் ரயில் வரும் போது மூடி திறக்கப்படுவதால் நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனாலேயே  தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், தூத்துக்குடி - மைசூர் இடையே மைசூர் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

இதனால் தூத்துக்குடி நாளுக்கு நாள் வளர்ந்து வந்த போதிலும், போதிய ரயில் வசதிகள் இல்லாத நிலை தொடர்கிறது. இந்நிலையில் நெல்லையில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வழியாக கடந்து கோவில்பட்டி செல்கின்றன. ஆனால் வாஞ்சி மணியாச்சிக்கு தூத்துக்குடியில் இருந்து குறுகிய தூரத்தில் செல்ல போதிய சாலை வசதி இல்லை.

இதனால் தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி செல்ல 1.30 மணி நேரம் ஆகிறது.எனவே தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சிக்கு செல்ல புதிய சாலை அமைக்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து நெல்லையில் கடந்த வாரம் ஆய்வுக் கூட்டம் நடத்திய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள சாலை தூத்துக்குடி சிப்காட்டிற்கு நடுவே செல்லும் வழியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகள் அதிகம் அமைந்துள்ள சிப்காட் வளாகம் இரண்டாக பிரிந்து விடும் சூழ்நிலை உள்ளது. எனவே மாற்று வழியில் திட்டத்தை தயாரிக்கலாமா, தூத்துக்குடியில் இருந்து ரயில் செல்லும் வழித் தடத்தை ஒட்டி சாலை அமைக்க முடியுமா என்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  

விரைவில் இந்த சாலைக்கு புதிய வடிவம் கொடுக்கப்படும். இந்தச் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்பிற்கு 30 நிமிடங்களில் பயணிக்க முடியும் என நம்பப்படுகிறது.

மக்கள் கருத்து

ஹென்றிFeb 9, 2023 - 04:58:09 PM | Posted IP 157.4*****

தூத்துக்குடி ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்றலாம்.

ராமநாதபூபதிJul 29, 2021 - 04:33:32 PM | Posted IP 162.1*****

2016ம் ஆண்டு ரவிக்குமார் சார் ஆட்சியராக இருந்தபோது நிலா ஸீ புட்ஸ் அருகில் உள்ள ஜோதி நகர் வழியாக மணியாச்சி செல்ல ஒரு சாலை அமைக்க ஒரு ஆய்வு நடந்து அதன் மூலமாக நிறைய இடைத்தரகர்கள் அந்த பகுதியில் உள்ள நிலங்களை பலமடங்கு விலையேத்தி விற்றுவிட்டார்கள். இப்போ அடுத்த ரவுண்ட் போல

TN69Jul 29, 2021 - 01:36:05 PM | Posted IP 108.1*****

மணியாச்சி வரைக்கும் ரோடு போடுவது நல்ல விஷயம் தான் ஆனால் அது வேஸ்ட் தூத்துக்குடி மாநகராட்சிக்கு வேண்டிய வளர்ச்சியை மாநகராட்சிக்கு உள்ளதான் கொண்டு வரணும் ரோடு ஆனாலும் சரி ரயில் ஆனாலும் சரி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தான் செஞ்சுக்கணும், வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷன்ல போய் தான் கொண்டு வரணும் அதற்கு என்ன அவசியம் வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தானே வாஞ்சிமணியாச்சி இருக்கு அல்லது வாஞ்சிமணியாச்சி மாவட்டத்தில் தூத்துக்குடி இருக்கா யோசிங்க நிர்வாகமே யோசிங்க. பயணிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைகள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துங்கள் அதுக்கு பிறகு என்ன செய்ய முடியுமா செய்யுங்கள். அப்போது தூத்துக்குடியில் 50,000 மக்கள் தொகை இருந்துச்சி அதுக்கேத்த ரயில்வே ஸ்டேஷன் வச்சிருந்தாங்க இப்போ ரெண்டு மூணு லட்சத்தை தாண்டி ஆச்சு இன்னும் அதே வளர்ச்சி இல்லாமல் சிறிது எந்த முன்னேற்றமும் இல்லாமல் சொன்னா என்ன அர்த்தம் என்ன மணி ஆச்சு அடுத்த கோவில்பட்டி அப்படியே போய்விட வேண்டியது தான் தூத்துக்குடி விட்டு மணியாச்சி கோவில்பட்டி அப்படியே மாவட்டத்தை விட்டு போயிருவாங்க...

TN69Jul 29, 2021 - 01:00:26 PM | Posted IP 173.2*****

TN69Jul 29, 2021 - 12:59:26 PM | Posted IP 162.1*****

SelvakumarJul 29, 2021 - 12:46:25 PM | Posted IP 162.1*****

Apptiye maniyachi to kayathar varai exten panna sankarancovil poga new line kitaikkum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.

மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory