» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனா தொற்றால் கணவன், மனைவி உயிரிழப்பு

புதன் 28, ஜூலை 2021 10:15:05 PM (IST)

கோவில்பட்டியில் கரோனா தொற்றால் கணவன், மனைவி உயிரிழந்தனர். 

கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டர் ரோட்டைச் சேர்ந்தவர் 75 வயது ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். அவரது மனைவி 73 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்கள் இருவரும் சமீபத்தில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்களாம். பின்னர் ஊருக்கு திரும்பிய பின் இருவருக்கும் சில நாள்களாக உடல் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. 

இந்நிலையில் பெற்றோரை பார்ப்பதற்காக வெளியூரில் இருந்த அவரது மகன்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இதை தொடர்ந்து 42 வயது மகன், 11 வயது பேரன், 9 வயது பேத்தி ஆகியோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் கோவில்பட்டி தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

இதில் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு மதுரை தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுபோல நேற்று அதிகாலையில் அவரது மனைவியும் தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவரும் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற 3 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மக்கள் கருத்து

adminJul 29, 2021 - 02:01:49 PM | Posted IP 162.1*****

never wear mask if you got infected with corona. this is very important

RamakrishnanJul 29, 2021 - 11:00:45 AM | Posted IP 162.1*****

payapadama irunga oxigen poturukangano suthi irukura environmenta paatho payapadama irunga kandipa coronala irunthu thapichuralam payanthingana treatment velaseyaathu

adminJul 29, 2021 - 07:31:14 AM | Posted IP 162.1*****

ventilated environment la bayapadama irunthale corona poidum. hospitalisation is bullshit

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam


Thoothukudi Business Directory