» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதன் 28, ஜூலை 2021 11:49:38 AM (IST)



தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக திமுக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். விவசாய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பரம் நகர் மாநில அமைப்பு செயலாளர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், மாவட்ட ஜெ.பேரவை துணை செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட பிரதிநிதி சேவியர்ராஜ், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சங்கரேஸ்வரி, துணை தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் நகர செயலாளர் அந்தோணி சேவியர், இயக்குநர்கள் அன்புலிங்கம், பாலசுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி செயலாளர்கள் அரசகுரு, நேரு, காயல்பட்டினம் நகர செயலாளர் செய்யது இப்ராஹிம், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தெற்கு மாவட்ட அலுவலகம் முன்பு மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான சுதாகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சரவணகுமார், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரமேஷ் கிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப அமைப்பு செயலாளர் சகாயராஜ், அமைப்பு சாரா அணி செயலாளர் கிஷோர் குமார், வட்ட செயலாளர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

புதுக்கோட்டையில் ஒன்றிய செயலாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவமாடசாமி, இளைஞரணி செயலாளர் மாதவன், நிர்வாகிகள் சங்கரலிங்கம், பிரம்மராஜ், ராமச்சந்திரன், வேலாயுதம், பிச்சையா, உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோல தூத்துக்குடி ராஜீவ் நகரில் முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் சி.த.சு.ஞானராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பண்டாரவிளையில் 


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் பண்டாரவிளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி, பண்டாரவிளையில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற கண்டனக்குரல் முழக்க ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கேஸ் மானியம் ரூபாய் 100, மகளிர்க்கு ஊக்கத்தொகை ரூபாய் ஆயிரம், விலைவாசி ஏற்றம் என பல்வேறு காரணங்களை வலியுறுத்தி ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், ஒன்றிய  செயலாளர் காசிராஜன், நகர செயலாளர் வேதமாணிக்கம், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் எப்ராயிம், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட இணைச் செயலாளர் பண்டாரவிளை பாஸ்கர், விவசாய பிரிவு மாவட்ட துணை தலைவர் பால்துரை, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் திருத்துவசிங், பெருமாள், கிருபாகரன், சுரேஷ், காமராஜ், பெரியசாமி, சேர்ந்திராஜன், மூக்காண்டி, துரை, ஜோயல், பந்தல் சுப்பிரமணியன், கிருஷ்ணன், சேர்மராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இது போல் தூத்துக்குடி 46வது வட்ட அதிமுக சார்பில் சிவந்தாகுளம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் உலகநாத பெருமாள் தலைமை தாங்கினார். பிரதிநிதிகள் கணேசன், சதீஷ், இசக்கி, சக்தி, ஆனந்த், ராமர், ராஜ், மகேஸ், உட்பல பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

உண்மை தமிழன்Jul 28, 2021 - 12:32:55 PM | Posted IP 108.1*****

திமுக ஆட்சிக்கு வந்தால் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக போராடுவார்கள், அதிமுக ஆட்சிக்கு வந்தால் எதிர்க்கட்சியாக இருந்த திமுக போராடுவார்கள், 2 கட்சிகளும் மாறி மாறி குறை கூறி கொண்டே இருப்பார்கள் ஆனால் உருப்படியாக மக்களுக்கு நல்லது செய்யமாட்டார்கள்..இனி திராவிட காட்சிகளை புறக்கணிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory