» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசி திமுக வெற்றி: கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு!

புதன் 28, ஜூலை 2021 11:29:04 AM (IST)

பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசி திமுக வெற்றி பெற்றுவிட்டது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜு குற்றம்சாட்டினார். 

சட்டப்பேரவைத் தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 என தேர்தல் வாக்குறுதிகள் அளித்த திமுக தலைமையிலான அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் சிதம்பராபுரத்தில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தலைமையில் அவரது வீட்டு முன்பு  அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., செய்தியாளர்களிடம் கூறியதாவது,  கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டது. மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. ஆனால் தற்போதைய ஆட்சியில் மின்தடை அதிகம் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள்.

கடைசி நிமிடம் வரை நீட் கிடையாது என்று கூறிவிட்டு, கடைசி நேரத்தில் வேறு வழியில்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து, பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டனர். தற்போது தேர்தல் வாக்குறுதியில் உள்ள எந்த திட்டங்களையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று கடம்பூர் ராஜு கூறினார்.


மக்கள் கருத்து

balaJul 29, 2021 - 09:45:07 AM | Posted IP 162.1*****

நீங்க பத்து வருசமா என்ன பண்ணுனீங்க மிஸ்டர்

உண்மை தமிழன்Jul 28, 2021 - 12:34:57 PM | Posted IP 108.1*****

அதிமுக ஆட்சி ஓடிட்டு இருக்கும்போதே நீட் ஐ ஒழிக்க மாட்டார்களாம், எதிர்க்கட்சியாக இருக்கும்போதே கத்துவார்களாம் .. இது தான் திராவிட அரசியல் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory