» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தம்பதியருக்கு அரிவாள் வெட்டு: தந்தை, 2 மகன்கள் மீது கொலை முயற்சி வழக்கு

புதன் 28, ஜூலை 2021 11:08:41 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே கணவன்- மனைவியை அரிவாளால் வெட்டிய தந்தை, மற்றும் அவரது 2 மகன்கள் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கோசல்ராம் நகரைச் சேர்ந்தவர் நிலமுடையான் மகன் மணி இதயராஜா (40). இவரது மனைவி முருகானந்தி (32). இவர்களுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் முனியன் (50) என்பவரது குடும்பத்திற்கு இடையே கழிவு நீர்கால்வாய் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

இது தொடர்பாக நேற்று ஏற்பட்ட தகராறில் முனியன் (50), மற்றும் அவரது மகன்கள் முத்தார் (24), வள்ளி (21) ஆகிய மூவரும் சேர்ந்து கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காயம் அடைந்த இருவரும் ஸ்ரீவைகுண்டம்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள  முனியன் மற்றும் அவரது 2 மகன்களை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Nalam Pasumaiyagam

Black Forest Cakes



Thoothukudi Business Directory