» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஈட் ரைட் கேம்பஷ் விருது: ஸ்பிக் நிறுவனத்திற்கு ஆட்சியர் பாராட்டு

புதன் 28, ஜூலை 2021 8:52:16 AM (IST)



தூத்துக்குடியில் நடைபெற்ற உணவு பாதுகாப்புத் துறை ஆலோசனை கூட்டத்தில்  ஈட் ரைட் கேம்பஷ் விருது பெற்ற ஸ்பிக் நிறுவனத்தினை ஆட்சியர் செந்தில்ராஜ்,  பாராட்டினார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஈட் ரைட் கேம்பஷ் விருது பெற்ற ஸ்பிக் நிறுவனத்தினைரையும், கைஜினிக் ரேட்டிங் விருது பெற்ற சத்யா ரெஸ்டாரண்ட் நிறுவுனத்தினைரையும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  பாராட்டினார்கள். மேலும் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றும் திட்டத்தை தொடங்கி வைக்கும் முகமாக கார்வல் எனர்ஜி நிறுவனத்தாருக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய் சேகரிப்பு கேன்களை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு கலப்படங்களை அதிக அளவில் ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும். உணவு நிறுவனங்கள் அனைத்தும் பதிவு சான்றிதழை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவிலான உணவு பொருட்கள் சாம்பிள்களை எடுத்து பரிசோதிக்க வேண்டும். கோவில்களில் விற்கப்படும் பிரசாதங்களும் சுகாதாரமான முறையில் உள்ளதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு குறும்படங்கள் உள்ளிட்டவைகளை வெளியிட வேண்டும். உப்பு விற்பனை செய்யும் நிறுவனங்கள் அட்ரஸ் இல்லாத பேக்கிங்களில் உப்புகளை விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பட்டி உற்பத்தி செய்பவர்கள் அதில் சீனி கலந்து தயாரிக்க அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தயாரிக்கப்படும் கருப்பட்டிகள் தரமானதாக உள்ளதா என்பதை அதிக அளவில் சாம்பிள் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். பல்வேறு துறை அலுவலர்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், ஏடிஎஸ்பி கார்த்திகேயன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளண்மை) வேலாயுதம், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், மாவட்ட தொழில் மைய மேலாளர் சொர்ணலதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.வித்யா, தூத்துக்குடி மாவட்ட ஓட்டல் சங்க தலைவர் செந்தில்ஆறுமுகம், தன்பாடு உப்பு ஏற்றுமதி விற்பனையாளர்கள் சங்க செயலாளர் சேர்மநாதன், எம்பவர் சங்கர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்ட உணவு பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory