» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் : ஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 27, ஜூலை 2021 5:15:30 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூலை 28) காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கோவிட்-19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு 01.04.2021 முதல் 27.07.2021 முடிய மொத்தம் 7,177 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 28.07.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி - தூத்துக்குடி, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - பாத்திமா நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - கணேஷ் நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - திரேஸ்புரம், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - தருவை ரோடு, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - மடத்தூர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - முள்ளக்காடு, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மில்லர்புரம், தூத்துக்குடி, புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி, இஞ்ஞாசியார்புரம், தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி, திருச்செந்தூர் ரோடு, தூத்துக்குடி ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதியில், மேலதட்டப்பாறை, பொட்டலூரணி, வடக்கு காரசேரி, திருவேங்கடபுரம், தெய்வசெயல்புரம், நடுவைகுறிச்சி, உத்திரமாடன் குடியிருப்பு, அரசு பொது மருத்துவமனை - திருச்செந்தூர், அரசு பொது மருத்துவமனை - காயல்பட்டினம், ஆழந்தலை, தாசன் தெரு, தட்டார்மடம், அரசு பொது மருத்துவமனை - கோவில்பட்டி, நகராட்சி அலுவலகம் - பூங்கா சாலை - கோவில்பட்டி, ராஜா மேல்நிலைப்பள்ளி - எட்டையபுரம், நகர்நல மையம் - ஸ்ரீராம்நகர், கோவில்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம் - இளையரசனேந்தல், ஆரம்ப சுகாதார நிலையம் - கீழஈரால், இ சேவை மையம் - முத்துக்குமார புரம், இ சேவை மையம் - முத்துக்குமார புரம், 

அங்கன்வாடி மையம் - மருதன்வாழ்வு, அங்கன்வாடி மையம் - நாரைக்கிணறு, அங்கன்வாடி மையம் - அய்யப்பபுரம், அங்கன்வாடி மையம் - என்.புதூர், சத்துணவு மையம் - காலம்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம் - வெள்ளாளங்கோட்டை, சத்துணவு மையம் - ராமநாதபுரம், ஆரம்ப சுகாதார நிலையம் - வெள்ளாளங்கோட்டை, சத்துணவு மையம் - EO புதுகுடி, ஆரம்ப சுகாதார நிலையம் - கயத்தார், சத்துணவு மையம் - சன்னது புதுக்குடி, 

ஆரம்ப சுகாதார நிலையம் - கயத்தார், சத்துணவு மையம் - பொம்மையாபுரம்,ஆரம்ப சுகாதார நிலையம் - கடம்பூர், பேரூராட்சிகள் அலுவலகம் - கழுகுமலை, கலைஞர் கிளினிக் - விளாத்திகுளம், சமுதாய நலக்கூடம் - நெடுங்குளம், சமுதாய நலக்கூடம் - பள்ளகுளம், சமுதாய நலக்கூடம் - துவாரந்தை, சமுதாய நலக்கூடம் - படர்ந்தபுளி காலனி, சமுதாய நலக்கூடம் - சக்கம்மாள்புரம், ஊராட்சி நூலகம் - வீரபட்டி,இ சேவை மையம் - சங்கரலிங்கபுரம், அங்கன்வாடி மையம் - பி.சின்னையாபுரம் ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

Common manJul 27, 2021 - 08:31:03 PM | Posted IP 162.1*****

When will covaxin be available?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory