» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெள்ள நிவாரணம் கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

திங்கள் 26, ஜூலை 2021 5:10:44 PM (IST)



வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடகா அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடடப்பட்ட யார்கோல் அணையை இடித்து அகற்ற வேண்டும், 2020-ம் ஆண்டு விடுபட்ட வெள்ள நிவாரணத் தொகை, மற்றும் 2020, 2021-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நல்லையா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட உதவி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விளாத்திகுளம் தாலுகா தலைவர் பிச்சையா, ஓட்டப்பிடாரம் தாலுகாக செயலாளர் அசோக்குமார், தலைவர் கிருஷ்ணமுர்த்தி, ஸ்ரீவைகுண்டம் செயலாளர் சுப்புத்துரை, திருச்செந்தூர் தாலுகா தலைவர் நடேச ஆதித்தன், செயலாளர் கோவிந்தன் மற்றும் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory