» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பத்திரபதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு : ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்!!

திங்கள் 26, ஜூலை 2021 3:57:00 PM (IST)



உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

உடன்குடி பத்திரப்பதிவு அலுவலக இடமாற்றம் எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் ஆஸாத், வே.ஆறுமுகம் வேகுணசிலன், ரவி மற்றும் நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: உடன்குடியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சார் பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த அலுவலகம் சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு முயற்சிகள் மேகொள்வதில் தவறில்லை. 

ஆனால் ஒரு தனியாரின் 13.5 ஏக்கர் சொத்து பல ஆண்டு காலமாக விற்பனை இல்லாமல் இருக்கவே புரோமோட்டர்கள் தங்கள் சொத்தின் மதிப்பு அதிகரிக்க வேண்டும் என திட்டமிட்டு 20 சென்ட் நிலத்தை பத்தர் பதிவு துறைக்கு தானமாக வழங்க உள்ளாாகள். தூண்டிலில் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் உதியை கையாண்டு உள்ளனர். மேலும் தொடர்ந்து இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உன் சூழலிலும் பத்திர பதிவுத்துறை அவசர கதியில் நிதி ஒதுக்கி வேலைகளை துரிதமாக செய்து வருவதை பார்க்கும் போது ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்குமோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. 

இது சம்பந்தமாக பலவேறு மனுக்கள் பத்திரதுறை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பணப்புழக்கம் அதிகமாக நடைபெறும் இந்த அலுவலகம் காட்டுப்பகுதியில் அமைந்தால் பொதுமக்களின் பொருளாதாரத்திற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத சூழல் ஏற்படும். எனவே, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு, உடன்குடியின் மையப் பகுதியில் சார்பதிவு அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory