» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசின் உதவியை நாடும் ராணுவ வீரரின் பெற்றோர் : ஆட்சியரிடம் கண்ணீர் மனு!

திங்கள் 26, ஜூலை 2021 3:33:12 PM (IST)



மகன் இறந்த பின்னர் மருமகள் மறுமணம் செய்து கொண்டதால் ஆதரவின்றி தவிக்கும் ராணுவ வீரரின் பெற்றோர் அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரைச் சேர்ந்த கந்தசாமி - சின்னத்தாய் தம்பதியர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து கண்ணீர் மல்க அளித்த மனு: எங்களது மகன் கருப்பசாமி (34) 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2020 நவம்பரில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். 

எங்களது மகனுக்கு தமயந்தி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், எனது மகனின் மறைவுக்கு பின்னர் மருமகள் தமயந்தி மறு திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் நாங்கள் இருவரும் அனாதையாகிவிட்டோம். வயதான காலத்தில் வாழ வழியின்றி தவித்து வருகிறது. எனவே எங்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory