» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு. ஆய்வு

சனி 24, ஜூலை 2021 12:01:41 PM (IST)



தூத்துக்குடியில் ரூ.53.40 கோடி மதிபீட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் உட்பட ஸ்மார்ட் சிட்டி திட்ட  பணிகளை  அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். 

தமிழக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக தூத்துக்குடிக்கு சனிக்கிழமை வருகை தந்தார். ஊரக உள்ளாட்சி துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் குளம்  புனரமைப்பு பணிகளை அவர் ஆய்வு செய்தார். 

மீளவிட்டான் அருகே 132 ஏக்கர் பரப்பளவுள்ள சி.வ. குளத்தில் 11 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளான கரையை பலப்படுத்துதல், வரத்து கால்வாயை சீர்செய்தல், குளம் தூர்வாருதல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையப் பகுதியில் சுமார் ரூ.50 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ததுடன் திட்டம் நிறைவு காலம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்போது வரையிலும் முடிக்கப்படாமல் உள்ளது. அதை விரைவாக முடிக்கும் பொருட்டு பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் உள்ளாட்சித் துறை வளர்ச்சித் திட்டப் பணிகளையும் இன்று ஆய்வு செய்துள்ளோம். தூத்துக்குடியில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கவும் சாலைகளை சீர்செய்திடவும் திட்டப்பணிகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 

நவம்பர், டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்திமுடிக்க முதல்வர் தெரிவித்துள்ளார். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. 

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல சில நகரங்கள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார். அதை தொடர்ந்து அங்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும் பருவமழை காலம் தொடங்க உள்ளதால் மழை காலம் நிறைவு பெற்றதும் தேர்தல் தொடங்கும் என்றார். 

ஆய்வின்போது, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாநகராட்சி பொறியாளர் சேர்மகனி, திமுக பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், நிர்வாகிகள் மதியழகன், நிர்மல்ராஜ், ஜெயக்குமார், உமரிசங்கர், பில்லா ஜெகன் மற்றும் அரசு அதிகாரிகள், திமுகவினர் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து

காலை 6 மணிக்குJul 24, 2021 - 03:22:07 PM | Posted IP 162.1*****

அன்னைக்கே உருப்படாமல் பாதாள சாக்கடை அமைத்தார்களே, அதே மாதிரி ஸ்மார்ட் சிட்டி சொல்லி ஊரை நாசமாகி விடுவார்கள் ..

என்ன நடக்குதுDec 3, 1627 - 03:30:00 AM | Posted IP 162.1*****

ஸ்மார்ட் சிட்டி சொல்லி அங்காங்கே பெரிய சாக்கடை தொட்டி ஊருக்குள்ளே அமைக்குறாங்க ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory