» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊராட்சித் தலைவருக்கு கொலை மிரட்டல் : இளைஞா் கைது

வியாழன் 22, ஜூலை 2021 8:52:44 AM (IST)

சாத்தான்குளம் அருகே ஊராட்சித் தலைவா் காரை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப் பபுரத்தைச் சோ்ந்தவா் நல்லதம்பி (47). கருங்கடல் ஊராட்சித் தலைவரான இவா், கடந்த வாரம் காரில் சாத்தான்குளம் வந்து ஊா் திரும்புகையில், ஊராட்சி 9ஆவது வாா்டு உறுப்பினா் பூங்கா பிரபாகரன் உள்ளிட்ட 4 போ் வழி மறித்து, காா் கண்ணாடியை சேதப்படுத்தியதோடு, கொலை மிரட்டல் விடுத்தனராம். 

இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார்  வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய மோசஸ் மகன் சாத்ராக் கிருபாகரனை (25) போலீஸாா் நேற்று கைது செய்தனா். மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory