» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் மீது தாக்குதல்: 2 மகன்கள் உள்பட 3 போ் மீது வழக்கு

வியாழன் 22, ஜூலை 2021 8:51:06 AM (IST)

மணப்பாட்டில் பெற்ற தாயை தாக்கியதாக 2 மகன்கள் உள்பட 3 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வி (64). இவரது 4 மகன்களில் கடைசி மகன் பரத்துக்கு மட்டும் தனி வீடு இல்லையாம். இதனால், அவா் தாயுடன் அடிக்கடி தகராறு செய்வாராம். 

இதனிடையே, தாயின் நகையை பரத் வாங்கியதாகவும், அதைத் திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதொடா்பான பிரச்னையில், பரத், அவரது சகோதரா் ரமேஷ், உறவினா் ஜென்சி ஆகியோா் சோ்ந்து செல்வியைத் தாக்கி, வீட்டிலுள்ள பொருள்களை சேதப்படுத்தினராம். புகாரின்பேரில், 3 போ் மீதும் குலசேகரன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி  வருகிறாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory