» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் 250 பேருக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்

வியாழன் 22, ஜூலை 2021 8:49:54 AM (IST)நாசரேத்தில் காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பில் 250 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் பெருந்தலைவர் காமராஜர்  119வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பாக பேருந்து நிலையம் அருகில்  கராத்தே செல்வின் துணைவியார் வயலா செல்வின் மற்றும் கழக பொதுச் செயலாளர் மின்னல் அந்தோணி ஆலோசனையின் பேரில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் தமிழக மீன்வளத்துறை கால்நடைத் பராமரிப்பு துறை அமைச்சர் அமைச்சர்  அனிதா ஆர்.இராதா கிருஷ்ணன்  250  பேர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.  இதில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஐஜி நாடார் மாவட்ட துணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார்.      

இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம், வழக்கறிஞரணி கிருபாகரன், கபடி கந்தன், நகர திமுக செயலாளர் ரவி செல்வக்கு மார், அவைத்தலைவர் அருள்ராஜ்  மாவட்ட பிரதிநிதிகள் சாமுவேல், அலெக்ஸ் பிரிட்டோ, அன்பு,  மாவட்ட வர்த்தக துணை அமைப்பாளர் ஜமீன் சாலமோன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தம்பு என்ற அருண் சாமுவேல் மாவட்ட தொழில் நுட்ப அமைப்பாளர்  பேரின்பராஜ், ஆழ்வை ஒன்றிய அவைத் தலைவர் சௌந்தர்ராஜன், ஒன்றிய பிரதிநிதிகள் ஞானராஜ், தாமரைச்செல்வன் மற்றும் காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள், திமுக பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam


Thoothukudi Business Directory