» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெற்ற மகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை போக்சோ சட்டத்தில் கைது!

செவ்வாய் 20, ஜூலை 2021 8:55:10 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 12 வயது மகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.

தூத்துக்குடி பண்டாரம்பட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் தங்கதுரை (48). இவருக்கு திருமணமாகி மனைவியும் 12 வயதில் ஒரு மகளும் 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தங்கதுரை கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ஒரு பூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இரண்டு பிள்ளைகளும் ஓட்டப்பிடாரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள்.

தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் படித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தங்கதுரை தினசரி மது அருந்தியும் கஞ்சா அடித்தும் இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனால் கணவன் மனைவி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், தங்கதுரை குடிபோதையில் தனது ஆடைகளை கழற்றி விட்டு, வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அவரது 12 வயது மகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதை அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்த அவரது தாயார் சத்தம் கேட்கிறது என்று எழுந்து பார்த்தபோது அவர் கணவர் கணவர் இருந்த நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டார். இது சம்பந்தமாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபாமா போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் விமலா விசாரணை நடத்தி தங்கதுரையை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் பண்டாரம்பட்டி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory